அரசு பேருந்தில் தகுந்த ஆவணம் இல்லாமல் எடுத்து சென்ற ஒரு கோடியே 90 லட்சம் பணம் பறிமுதல்

0 22130
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அரசு பேருந்தில் தகுந்த ஆவணம் இல்லாமல் எடுத்து சென்ற ஒரு கோடியே 90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அரசு பேருந்தில் தகுந்த ஆவணம் இல்லாமல் எடுத்து சென்ற ஒரு கோடியே 90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பஞ்சலிங்கபுரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கர்னூல்- ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது ஹைதராபாத்திலிருந்து கர்னூல் வந்த அரசு பேருந்தில் சோதனை நடத்தியதில் ராமா சவுத்ரி என்பவரிடம் இருந்த 2 பைகளில் கட்டு கட்டாக பணம் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் இந்த பணம் ரங்கா நாயக்க நாயுடு என்பவருக்கு சொந்தமானது என்பதும், ஹைதராபாத்தில் நிலம் வாங்குவதற்காக கர்னூலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டதும் தெரிய வந்தது.

மேலும் இதற்கான எந்த ஒரு ஆவணமும் இல்லாத காரணத்தினால் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் வருமான வரித் துறை யினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments