விடை தெரியாத கேள்வி... அவிழாத மர்ம முடிச்சு

0 31830
சென்னை - நொளம்பூர் கழிவு நீர் கால்வாயில் விழுந்து தாய் - மகள் பலியான விவகாரத்தில், இருவரும் உயிரிழந்தது எப்படி ? என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. விடை தெரியாத கேள்விக்கு விரைவில் பதில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை - நொளம்பூர் கழிவு நீர் கால்வாயில் விழுந்து தாய் - மகள் பலியான விவகாரத்தில், இருவரும் உயிரிழந்தது எப்படி ? என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. விடை தெரியாத கேள்விக்கு விரைவில் பதில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை - மதுரவாயல் தேசிய நெடுஞ்சாலையில் நொளம்பூர் சர்வீஸ் ரோட்டில் திறந்த நிலையில் கிடந்த கழிவு நீர் கால்வாய், எதிர்பாராதவிதமாக தாய் - மகள் உயிரை பறித்தது. கடந்த 6 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தனியார் கண் மருத்துவ கல்வி நிறுவனத்தின் பேராசிரியை கரோலின் பிரமிளாவும், அவரது 20 வயது மகள் இவான் ஜலினும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

10 அடி ஆழம் கொண்ட இந்த கால்வாயில் இருவரும் விழுந்தபோது, 3 அடிக்கும் குறைவாக கழிவு நீர் இருந்ததாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையில், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மருத்துவர்களை பொறுத்தவரை, தாயும் மகளும் கால்வாய்க்குள் விழுந்த வேகத்தில் கழிவு நீர் வாய்க்குள் நுழைந்து, அதில் இருந்த நச்சு மூலம் உயிரிழப்பு நிகழ்ந்திக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் தெளிவான காரணம் தெரியவில்லை என்பதால், கழிவு நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு, "விஷ்ரா" எனும் முழுமையான தடயவியல் பரிசோதனை ஆய்வு நடைமுறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் கிடைக்கும் இந்த ஆய்வின் முடிவில், தாய் - மகள் உயிரிழப்புக்கான உண்மைக் காரணம் தெரிய வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments