தெறித்த ராக்கெட் லாஞ்சர் குண்டு... சிதைந்த பெண்ணின் கால்...ஆயுதப் பயிற்சியின்போது விபரீதம்!

0 12796

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆயுதப் பயிற்சி பெறும் ராணுவ வீரர்கள் சுட்ட சிறிய ரக ராக்கெட் லாஞ்சர் குண்டு பாறையில் பட்டுத் தெறித்ததில், அதன் பாகங்கள் பெண் ஒருவரின் தொடைப் பகுதியை கிழித்து படுகாயம் ஏற்பட்டது.

திருச்சி மணப்பாறை வீரமலை அடிவாரத்தில் இந்திய ராணுவத்தின் பல்வேறு ரெஜிமென்ட்டுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடுதல் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை கையாளும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பயிற்சியின்போது வனப் பகுதியில் யாரும் நுழையக் கூடாது என்று வருவாய்த்துறையினர் மூலம் தண்டோரோ போட்டு அப்பகுதி கிராமங்களில் அறிவிப்பு வெளியிடுகின்றனர்.

நேற்று மாலை 4.30 மணி அளவில் பூசாரிபட்டியைச் சேர்ந்த நல்லம்மாள் என்ற பெண், வயலில் கட்டியிருந்த தனது மாட்டை காணவில்லை என  வனப்பகுதிக்குள் தேடிச் சென்றுள்ளார். அப்போது ராணுவத்தினர் சுட்ட சிறிய ரக ராக்கெட் லாஞ்சர் குண்டு ஒன்று பாறையில் பட்டு சிதறி, அதன் பாகங்கள், நல்லம்மாளின் தொடையைக் கிழித்ததாகக் கூறப்படுகிறது.

படுகாயமடைந்த நல்லம்மாள் மணப்பாறை சிந்துஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் மேல்சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments