“ஃபேஸ்புக், யூடியூப் வீடியோக்களுக்கு “லைக், சப்ஸ்கிரைப்” செய்தால் பணம்” - கோடிகளில் திருடிய கும்பல்

0 4805

ஃபேஸ்புக் மற்றும் யூடியுபில் லைக் மற்றும் சப்ஸ்கிரைப் செய்தால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த செயலிகள் குறித்து சென்னையில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

மீ ஷேர் மற்றும் லைக் சேர் என்ற பெயரில் செயலிகளை உருவாக்கி, லிங்க்குகள் மூலம் அவற்றை தரவிறக்கம் செய்ய வைத்துள்ளனர். அதில் வரும் வீடியோக்களை லைக் செய்தாலும் சப்ஸ்கிரைப் செய்தாலும் லைக் ஒன்றுக்கு 8 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

ஆனால் அப்படி சம்பாதிப்பதற்கு ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 100 வீடியோக்களை லைக் செய்தால் மாதம் 54 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என கணக்கிட்டு பலரும் இந்த செயலிகளில் பணம் செலுத்தியுள்ளனர்.

ஆனால் பணம் செலுத்திய ஓரிரு நாளில் செயலி செயலிழந்துவிடுவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் பணத்தை ஏமாந்த ஏராளமானோர் சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகாரளித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments