கர்நாடகா போக்குவரத்து தொழிலாளர்கள் 3 ஆவது நாளாக வேலை நிறுத்தம் : அரசுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
கர்நாடகாவில் அரசுக்கும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
அதனால் அங்கு 3 ஆவது நாளாக பேருந்துகள் ஓடாமல் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
தங்களை அரசுப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், கொரோனாவுக்கு பலியான ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முதல் கர்நாடக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
நேற்று மாலை நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இன்று துணை முதலமைச்சர் லட்சுமணன் சவாதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொழிலாளர்கள் சார்பில் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 3 கட்டமாக பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.
Comments