வடகொரிய தலைநகரில் பனிப்பொழிவு: கட்டிடங்கள், சாலைகள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டு ரம்மியமாக காட்சி
வடகொரிய தலைநகரில் உள்ள கட்டிடங்கள், சாலைகள் உள்ளிட்டவை பனிக்கட்டிகளால் மூடப்பட்டு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கின்றன.
இந்த ஆண்டில் முதல்முறையாக இன்று பியாங்யாங்கில் பரவலாக பனிப்பொழிவு நேரிட்டது. பெரும்பாலான பகுதிகளில் 5 சென்டி மீட்டருக்கும் அதிகமாக பனிப்பொழிவு நேரிட்டுள்ளது.
இந்த பனிப்பொழிவால் பியாங்யாங்கில் உள்ள கட்டிடங்கள், சாலைகள், செடி கொடிகள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டு வெள்ளை வெளேரென காட்சியளிக்கின்றன.
வழக்கமானதை விட 29 நாள்கள் தாமதமாகவும், கடந்த ஆண்டை விட 13 நாள்கள் தாமதமாகவும் பனிப்பொழிவு நேரிட்டுள்ளதாக அரசு ஊடகமான கேசிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.
Comments