"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் முற்றுகையைக் கைவிட்ட விவசாயிகள்... டெல்லி - நொய்டா சாலையில் நேற்றிரவு முதல் தடையின்றி வாகனப் போக்குவரத்து
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சு நடத்திய பின் விவசாயிகள் முற்றுகையைக் கைவிட்டதால் டெல்லி - நொய்டா சாலையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
நேற்று விவசாய சங்கப் பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துப் பேசினர். அப்போது விவசாயிகளின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக உறுதியளித்ததுடன், முற்றுகையைக் கைவிடும்படி அரசு கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்றிரவு நொய்டா - டெல்லி இடையே சில்லாவில் உள்ள சோதனைச்சாவடியில் முற்றுகையைக் கைவிட்ட விவசாயிகள் அருகில் உள்ள பூங்காவில் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இதனால் நேற்றிரவு முதல் அந்தப் பாதையில் வழக்கம்போல் வாகனங்கள் தடையின்றிச் சென்று வருகின்றன.
Comments