2021 அக்டோபருக்கு பிறகு நாட்டில் இயல்பு வாழ்க்கை மலரும் - சீரம் இந்தியா சிஇஓ
வரும் அக்டோபருக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டப்பட்டபின்னர், இயல்பு வாழ்க்கை திரும்பும் என சீரம் இந்தியா நிறுவன சிஇஓ அடார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தக மாநாடு ஒன்றில் பேசிய அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசிக்கு இந்த மாத இறுதியில் அரசின் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.
எனவே புத்தாண்டில் இருந்து தடுப்பூசி போடும் பணிகள் துவங்கும் என கருதுவதாக அவர் தெரிவித்தார். நாட்டு மக்களில் 20 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட உடன், அனைத்து மக்களுக்கும் ஒரு நம்பிக்கை பிறக்கும் என்றார் அவர்.
சீரம் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் தங்களது தடுப்பூசி சோதனையின் இறுதிக் கட்ட முடிவுகளை தாக்கல் செய்யுமாறு அரசின் தடுப்பூசி குழு கடந்த வாரம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Comments