ஜனவரி முதல் காசோலைகளுக்கு Positive Pay பாதுகாப்பு முறை அமல்

0 21899

காசோலை மோசடிகளை தடுக்கும் விதத்தில், வரும் ஒன்றாம் தேதி முதல் Positive Pay என்ற புதிய பாதுகாப்பு நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, காசோலையை வழங்குபவர்கள், அதன் எண், தொகை, நாள், காசோலையை பெறும் நபர், காசோலையின் முன்-பின் பக்க படம் ஆகியவற்றை தாம் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு அனுப்ப வேண்டும்.

50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகைக்காக வழங்கப்படும் காசோலைகளில் இந்த விவரங்களை சரிபார்த்த பிறகே, வங்கிகள் அந்த தொகையை வழங்கும்.

ஏற்கனவே காசோலை மோசடிகளை தடுக்க 2010 ல் CTS பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுவரப்பட்டாலும், கூடுதல் பாதுகாப்பிற்காக  இப்போது Positive Pay  என்ற நடைமுறை வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments