103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை - சிபிஐ
சென்னையில் 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சோதனையிட்ட போது 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து, அந்நிறுவனத்தில் 72 சாவிகள் கொண்ட வால்ட்டில் பத்திரமாக சீலிட்டு வைத்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது.
103 கிலோ மாயமான விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எஸ்பி தலைமையில் சிபிசிஐடி விசாரணை நடத்தும் எனவும், இந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்த விசாரணை உயர் அதிகாரிகளால் நடத்தப்படுவதாகவும் செய்திக்குறிப்பில் சிபிஐ கூறியுள்ளது.
Comments