ஆந்திராவில் பரவி வரும் வலிப்புடன் கூடிய மர்ம நோய்க்கு அரிசியில் கலந்திருந்த பூச்சிக்கொல்லிகளே காரணம் - ஆய்வு முடிவு

0 8539
ஆந்திராவில் பரவி வரும் வலிப்புடன் கூடிய மர்ம நோய்க்கு அரிசியில் கலந்திருந்த பூச்சிக்கொல்லிகளே காரணம் - ஆய்வு முடிவு

ஆந்திராவில் வலிப்புடன் கூடிய மர்ம நோய்க்கு அரிசியில் கலந்திருந்த பூச்சிக்கொல்லிகளே காரணம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

மேற்கு கோதாவரி மாவட்டம், எலூரில் பரவிய  மர்மநோய்க்கு இதுவரை 600க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 பேர்  உயிரிழந்தனர்.

இந்த நிலையில் எலுரு நகரில் இருந்து நீர், இரத்தம், உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்த ஐதராபாத் தேசிய ஊட்டச்சத்து நிறுவன  வல்லுநர்கள் அரிசியில் கலந்திருக்கும் பாதரசமும், காய்கறிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் இருந்த பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் தான் நோய்க்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments