டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அகற்றக் கோரும் பொது நல மனு... புதன்கிழமை விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அகற்றக் கோரி தாக்கல் செய்த பொது நல மனு மீது உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணை தொடங்குகிறது.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரிக்க உள்ளது. விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் கொரோனா பரவும் ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் போக்குவரத்து, இயல்புவாழ்வுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே கடந்த வியாழக்கிழமை விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Comments