தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரதமர் மோடியுடன் சந்திப்பு..

0 1888
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.

பிரதமருடன் 40 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பின் போது மாநிலத்துக்கு மத்திய அரசு நிலுவை வைத்துள்ள நிதியை வழங்குமாறு ராவ் கேட்டுக் கொண்டார்.

அரசியலில் பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வரும் சந்திரசேகர ராவ், டெல்லி சென்று பிரதமரையும் அமித் ஷாவையும் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நடைபெற்ற ஹைதராபாத் மாநகராட்சி வார்டுகளுக்கான தேர்தல் பிரச்சாரத்திலும் பாஜக மீது சந்திரசேகர ராவ் கடும் விமர்சனம் செய்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments