திருமண ஊர்வலத்தின் போது துப்பாக்கிச்சூடு.. 12வயது சிறுவன் உயிரிழப்பு.. துக்க ஊர்வலமாக மாறிய அவலம்

0 3047
மத்தியப் பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு கொண்டாட்டத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு கொண்டாட்டத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள லஹார்ச்சி கிராமத்தில்  கடந்த வெள்ளியன்று இரவு திருமண விழா நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் வந்த ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து உற்சாகத்துடன் சுட்ட போது அருகில் இருந்த 12 வயது சிறுவன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தான்.

இச்சம்பவம் குறித்து கலீபீத் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments