தமிழ்நாடு முழுவதும், லோக் அதாலத் எனப்படும், மக்கள் நீதிமன்றத்தில் 22 ஆயிரத்து 546 வழக்குகளுக்கு தீர்வு

0 4456
தமிழ்நாடு முழுவதும், லோக் அதாலத் எனப்படும், மக்கள் நீதிமன்றத்தில் 22 ஆயிரத்து 546 வழக்குகளுக்கு தீர்வு

தமிழ்நாடு முழுவதும், நடைபெற்ற, லோக் அதாலத் எனப்படும், மக்கள் நீதிமன்றத்தில், 262 கோடி மதிப்பிலான 22 ஆயிரத்து 546 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு பிப்ரவரி, ஏப்ரல், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இரண்டாவது சனிக்கிழமைகளில், மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற வேண்டும்.

ஆனால், பிப்ரவரி மாதத்திற்கு பின்னர், கொரோனா ஊரடங்கால் அவை முன்னெடுக்கப்படவில்லை. 9 மாத இடைவெளிக்குப் பின், சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களின் மூலமாக நடத்தப்பட்ட 354 அமர்வுகளில் 82 ஆயிரத்து 77 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, தீர்வு காணப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments