பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி - நடிகர் ரஜினிகாந்த்

0 3154
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி - நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். 

நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டும் என வாழ்த்துவதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்சும் ரஜினிக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த்  நன்றி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments