நடிகை சித்ரா மரணம் - கணவர் ஹேம்நாத்திடம் நான்காவது நாளாக நடைபெற்ற விசாரணை

0 7589
நடிகை சித்ரா மரணம் - கணவர் ஹேம்நாத்திடம் நான்காவது நாளாக நடைபெற்ற விசாரணை

நடிகை சித்ரா மரணம் தொடர்பாக அவரது கணவரிடம் 4வது நாளாக போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சித்ரா கடைசியாக கலந்துகொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பில் நாயகனுடன் நெருக்கமான காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும் அது பிடிக்காமல் ஹேம்நாத் சித்ராவுடன் பிரச்சனை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

தனது மகளை ஹேம்நாத் கட்டுப்படுத்துவதை சித்ராவின் தாயார் விரும்பாமல் சண்டையிட்டதாகவும் கூறப்படும் நிலையில், இந்தக் காரணங்களால் சித்ரா அதீத மன உளைச்சலில் இருந்திருக்கிறார் என்கின்றனர் போலீசார்.

எனவே சித்ரா கடைசியாகப் பங்கேற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டவர்களிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், அந்த தகவல்களை அடிப்படையாக வைத்து ஹேம்நாத்திடம் நான்காவது நாளாக விசாரணை மேற்கொண்டனர்.

ஹேம்நாத்தின் தந்தையிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் இறங்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments