நாமக்கல்லில் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தண்டோரா மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளும் தலைமை ஆசிரியர்
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே, அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளியின் தலைமை ஆசிரியர் தண்டோரா மூலம் வீதி வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
ஈச்சம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 20 மாணவர்கள் மட்டுமே பயின்று வருவதால், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் அரசு பள்ளியில் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் கிராம மக்களுக்கு எடுத்துரைத்தார்.
Comments