நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் : மு.க. ஸ்டாலின் கோரிக்கை

0 1561
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் : மு.க. ஸ்டாலின் கோரிக்கை

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், மத்திய அரசிடம் 3 ஆயிரத்து 758 கோடி ரூபாய் நிதியுதவி கேட்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்.

பாதிப்பு நிகழ்ந்து, 15 நாட்களுக்கு மேலாகியும் அடித்தட்டு மக்களுக்கு இன்னும் நிவாரணம் போய் சேரவில்லை என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனவே, இடைக்கால நிவாரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும், விவசாயிகளுக்கு தலா10 ஆயிரம் ரூபாயும் உடனடியாக, வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments