மெக்சிகோவில் ஆஸ்டெக் கோபுரத்தில் மேலும் 119 மண்டை ஓடுகள் கண்டெடுப்பு
மெக்சிகோவில் உள்ள ஆஸ்டெக் கோபுரத்தில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்வின்போது மேலும் 119 மனித மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
2015ம் ஆண்டில் கட்டிடப் பணிக்காக நிலத்தை தோண்டியபோது நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
அவை 14ம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த பூர்வ குடிகளான ஆஸ்டெக் பேரரசின் புராதன கோவில் என்றும், 16ம் நூற்றாண்டில் ஊடுருவிய ஸ்பானிய காலனியவாதிகளால் அந்த இன மக்களின் பேரரசு வீழ்த்தப்பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
Comments