தருமபுரி: நீர்ப்பாசனத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கைது
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் நீர்ப்பாசனத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்பெண்ணை ஆற்றில் இருந்து தூள்செட்டி ஏரிக்குத் தண்ணீர் கொண்டுவரக் கால்வாய் அமைக்கக் கோரித் தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறி ஈஸ்வரன் உள்ளிட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
Comments