டிஜிட்டல் வடிவுக்கு மாறுகிறது வாக்காளர் அடையாள அட்டை?
வாக்காளர் அடையாள அட்டைகளை டிஜிட்டல் வடிவில் மாற்றலாமா என தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
இது உறுதியானால் வரவுள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னரே அதற்கான பணிகள் துவங்கி விடும் என கூறப்படுகிறது.
டிஜிட்டல் வடிவில் வாக்காளர் அடையாள அட்டைகளை மாற்றினால், தற்போது நடைமுறையில் உள்ள அட்டைகளை அச்சடிக்கும் செலவு குறையும். 2019 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நாட்டில் 91.1 கோடி பேர் வாக்களிக்கும் உரிமைக்கு தகுதி பெற்றுள்ளனர்.
Comments