நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி ஆற்காட்டில் இலவச பேருந்து சேவை..!
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இலவச பேருந்து சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆற்காடு ரஜினி மக்கள் மன்றத்தினர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளை கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேலும் ஆற்காட்டில் இருந்து கலவை செல்லும் தனியார் பேருந்தில் பொதுமக்கள் இன்று ஒருநாள் இலவசமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், ரஜினி ரசிகர் ஒருவர் இலவசமாக டீ விற்பனை செய்து வருகிறார். தக்கலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எதிரே உணவகம் நடத்தி வரும் நாகராஜன், என்பவர் தீவிர ரஜினி ரசிகர் ஆவார்.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கும் விதமாகவும், மக்கள் மத்தியில் அவரை பிரபலப்படுத்தும் விதமாகவும் இலவசமாக டீ விற்பனை செய்து வருவதாக நாகராஜன் தெரிவித்துள்ளார்.
Comments