போலிக் காசோலை பெற்று வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க முயற்சி.. வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது

0 9490
போலிக் காசோலை பெற்று வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க முயற்சி.. வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது

சென்னையில் போலிக் காசோலை பெற்று வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க முயன்ற 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பைஜுஸ் நிறுவனத்தின் பெயரில் போலிக் காசோலைகளைக் கொடுத்து நொய்டா, புனே நகரங்களிலும், சத்தீஸ்கரிலும் உள்ள ஐசிஐசிஐ வங்கிக் கிளைகளில் சிலர் பணம் எடுக்க முயன்றது அந்நிறுவன அதிகாரியின் அறிவுறுத்தலால் தடுக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் ஐசிஐசிஐ கிளையில் பைஜுஸ் நிறுவனத்தின் முத்திரையிட்ட தாளைக் கொடுத்துக் காசோலைப் புத்தகம் பெற முயன்றது குறித்துத் தகவல் அறிந்த அந்நிறுவன அதிகாரி சிவானந்த கிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்துக் காவல் தனிப்படையினர், உடந்தையாக இருந்த ஐசிஐசிஐ வங்கியின் கரூர் கிளை மேலாளர் மருதுபாண்டி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments