CMS-01 தொலைத்தொடர்பு செயற்கைகோளை 17 ஆம் தேதி ஏவுகிறது இஸ்ரோ
தொலைத் தொடர்புக்கான மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோளை வரும் 17 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவ உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு சேவைகளுக்கான செயற்கைக் கோள்களை இஸ்ரோ தொடர்ந்து ஏவி வருகிறது. அந்த வகையில் 42 ஆவது செயற்கைக் கோளான CMS-01 என்ற செயற்கைக் கோள் வரும் 17 ஆம் தேதி ஏவப்பட உள்ளது.
சென்னைக்கு அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் வாயிலாக இந்த செய்ற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது.
காலநிலையை பொறுத்து அன்று பிற்பகல் 3 மணி 41 நிமிடத்தில் பிஎஸ்எல்வி புறப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. CMS-01 செயற்கைக் கோளில் உள்ள விரிவாக்கம் செய்யப்பட்ட சி பாண்டு அலைவரிசை ஸ்பெக்ட்ரம் வாயிலாக நாட்டின் முக்கிய நிலப்பரப்பு, அந்தமான்-நிகோபார் மற்றும் லட்சத்தீவுகளில் தொலைத் தொடர்பு சேவைகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ள முடியும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ ஏவும் 77 ஆவது ராக்கெட் பிஎஸ்எல்வி -சி-50 என்பது குறிப்பிடத்தக்கது. 6 இயந்திரங்கள் பொருத்தப்பட்ட XL ரக22 ஆவது ராக்கெட் என்பதும் கூடுதல் சிறப்பம்சம்.
PSLV-C50 is scheduled to launch CMS-01, a communication satellite on December 17, 2020, from Satish Dhawan Space Centre SHAR, Sriharikota: ISRO pic.twitter.com/vM5mqFUfsA
— ANI (@ANI) December 11, 2020
Comments