ஓசூர் : உறங்கிய கணவர்; கொலை செய்த மனைவி!

0 48273
தனபால் - சத்தியா

கிருஷ்ணகிரி அருகே  தகாத உறவை கைவிட வலியுறுத்திய கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகேயுள்ள  சீங்கோட்டையை சேர்ந்த கட்டட தொழிலாளி தனபால் என்பவருக்கும், பென்னாகரத்தை சேர்ந்த சத்தியா என்பவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.  திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒசூர் அடுத்த பேகேப்பள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில்,  நேற்றிரவு தனபாலன் வீட்டில் இருந்து அலறல் சத்தம் வருவதை கேட்ட அக்கம்பக்கத்தினர், நேரில் சென்று பார்த்தனர். வீட்டில் தனபால் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.  அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து ஒசூர் சிப்காட் போலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு  விரைந்த காவல்துறையினர் தனபாலின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனபால் இறப்பு குறித்து மனைவி சத்தியாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர், முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்துள்ளார். 

இதனால்,  சந்தேகமடைந்த காவல் துறையினர் சத்தியாவை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் கிடைத்தன.  பென்னாகரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சத்தியா  வீட்டருகேயுள்ள வசிக்கும் தன்  நண்பரின்  வீட்டுக்கு  அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, சத்தியாவிடம் பழக்கம் ஏற்பட்டு நாளைடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. 

தனபால் வேலைக்கு சென்றதும் மணிகண்டன் சத்தியா வீட்டுக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் இது குறித்து தனபாலிடம் கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த தனபால் தனது மனைவியிடம் தகாத உறவை கைவிட வலியுறுத்தியுள்ளார்.  ஆனால், சத்தியா மணிகண்டனுடன் தொடர்பை கை விட மறுத்தார். 

ஒரு கட்டத்தில்  தங்களுக்கு தடையாகவுள்ள தனபாலை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர்.   டிசம்பர் 11 ஆம் தேதி இரவு தனபால் உறங்க சென்றுள்ளார். அப்போது மணிகண்டனை   வரவழைத்த சத்தியா, தனபாலை கொலை செய்தது தெரிய வந்தது. 

தொடர்ந்து ஓசூர் போலீஸார் சத்தியாவையும் மணிகண்டனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments