ரஷ்ய அதிபரின் விமானத்தில் முக்கிய உதிரி பாகங்கள் துணிகர திருட்டு..!

0 2619
ரஷ்ய அதிபரின் விமானத்தில் முக்கிய உதிரி பாகங்கள் துணிகர திருட்டு..!

ஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பயணம் செய்யும் அதிநவீன விமானத்தில் முக்கிய உதிரி பாகங்கள் திருட்டு போயிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இலுசின் II-80' என்ற இந்த அதிநவீன விமானம் அணுகுண்டு தாக்குதல் மற்றும் இயற்கை பேரிடரின் போது அதிபரை காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் தற்போது இந்த வகையை சேர்ந்த 4 விமானங்கள் மட்டுமே உள்ளன.

இதில் ஒரு விமானம் பராமரிப்புக்காக டகோன்ராக் நகரில் உள்ள விமானப் படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த விமானத்தில் இருந்து 39 ரேடியோ சாதனங்கள் திருடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ரேடியோ சாதனங்கள் தங்கம் மற்றும் பிளாட்டினத்தில் தயாரிக்கப்பட்டவை என்பதால் திருடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. திருடு போன பாகங்களின் மதிப்பு 10லட்சம் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments