அண்டார்க்டிகாவில் 150 கி.மீ நீளமும், 55 கி.மீ. அகலமும் கொண்ட பனிப்பாறை தனித்து பயணிக்கிறது..
அண்டார்க்டிக்காவில் இருந்து பிரிந்த உலகின் மிகப் பெரிய பனிப்பாறை கடலில் தனித்துச் செல்வதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
150 கிலோ மீட்டர் நீளமும், 55 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட அந்த பனிப்பாறைக்கு தற்போது மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பது தெரியவந்துள்ளது. சவுத் ஜார்ஜியா தீவை நோக்கி பயணித்து வரும் பிரமாண்டமான பனிப்பாறைஇ தற்போது 200 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால், விரைவில் அந்த தீவில் மோதி நிற்கும் என எதிர்பார்ப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
தற்போது இந்தப் பனிப்பாறை பிரிந்துள்ளதால் அதனை நம்பியிருந்த உயிரினங்கள் வாழ்வு குறித்தும், தீவில் மோதும் போது ஏற்படும் தாக்கம் குறித்தும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Comments