பசுவதை தடைச் சட்டத்தை மேலவையில் நிறைவேற்றுவதில் சிக்கல்... அவசரச் சட்டத்தை பிறப்பிக்க கர்நாடக அரசு முடிவு?

0 1444
பசுவதை தடைச் சட்டத்தை மேலவையில் நிறைவேற்றுவதில் சிக்கல்... அவசரச் சட்டத்தை பிறப்பிக்க கர்நாடக அரசு முடிவு?

பசுவதை தடுப்புச் சட்ட மசோதாவை சட்டமன்ற மேலவையில் நிறைவேற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவசரச் சட்டம் கொண்டு வர கர்நாடக அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மசோதா கடந்த புதன்கிழமை கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மேலவையில், எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து அதை தோற்கடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

எனினும் மசோதாவை மேலவையில் நேற்று தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதன் தலைவரான பிரதாப்சந்திர ஷெட்டி, அவையை வியாழன் மாலையே ஒத்தி வைத்து விட்டார்.

இதற்கு எதிராக மேலவையின் பாஜக உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து புகார் தெரிவிக்க உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments