தன்பாலினச் சேர்க்கைக்கு பூடான் அரசு அனுமதி..!
தன்பாலினச் சேர்க்கைக்கு பூடான் அரசு அனுமதியளித்துள்ளது.
தன்பாலினச் சேர்க்கை குற்றமாக கருதப்பட்டு வந்த பூடானில், அதன் மீதான தடையை நீக்க மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் தன்பாலினச் சேர்க்கைக்கு அனுமதியளிப்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
69 பேரில் 66 பேர் தன்பாலினச் சேர்க்கை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து பூடான் மன்னர் ஒப்புதல் வழங்கியதும் இந்தச் சட்டம் அமலுக்கு வர உள்ளது.
Comments