மேகாலயா முதலமைச்சர் கொரோனாவால் பாதிப்பு

0 1186
மேகாலயா முதலமைச்சர் கொரோனாவால் பாதிப்பு

மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் கே சங்மாவுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் , தாம் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டபோது தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டதாகவும், லேசான அறிகுறிகள் இருந்ததால் வீட்டில் தனிமையில் இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5 நாட்களில் தம்முடன் நேரடியாகத் தொடர்பில் இருந்த அனைவரும் அவர்களின் உடல்நிலை குறித்து தயவுசெய்து கண்காணிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments