தீவிரவாதிக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்த பாகிஸ்தான் பிரதமர்
மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஜாகிர் உஸ்மான் லக்விக்கு, மாதச்செலவுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் தர அனுமதிக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்த கோரிக்கையை ஐநா.பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக் கொண்டுள்ளது.
பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள லக்விக்கு மருத்துவம் மற்றும் வீட்டுச் செலவுகளுக்குப் பணம் வழங்க அனுமதி கோரினார் இம்ரான் கான். இந்தியா மீது தாக்குதல் நடத்திய லக்வி, ஹபீஸ் சையத் உள்ளிட்ட பல தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுவதாகவும் அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் கண்துடைப்பு என்றும் இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.
Comments