"அடுத்த கல்வி ஆண்டில் புதிய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும்" மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தகவல்

0 6217

அடுத்த கல்வியாண்டில் இருந்து AICTE, UGC அமைப்புகள் இருக்காது என மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகிய தனித்தனி அமைப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்டு புதிய உயர்கல்வி ஆணையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய பல்கலைக்கழகங்கள் நடத்தி வரும் தனித்தனி நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, வரும் கல்வியாண்டு முதல் ஒரே நுழைவுத் தேர்வு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments