குருவாயூர் கிருஷ்ணசாமி கோவிலில் 46 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு

0 1692
குருவாயூர் கிருஷ்ணசாமி கோவிலில் 46 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு

குருவாயூர் கிருஷ்ணசாமி கோவிலில் 46 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் முதல் தேதி குருவாயூர் கிருஷ்ணசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தினமும் 4 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் பூசாரிகள், ஊழியர்கள் என 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மறு அறிவிப்பு வரும் வரை கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் தினசரி பூஜைகள், வழிபாடு வழக்கம்போல் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments