ஜே.பி.நட்டா கார் அணிவகுப்பு மீது தாக்குதல் விவகாரம் - 3 வழக்குகள் பதிவு : இதுவரை 7 பேர் கைது: மே.வ தலைமைச் செயலாளர்
கொல்கத்தா அருகே, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வாகன அணிவகுப்பின் மீது நடைபெற்ற கல்வீச்சு தாக்குதல் தொடர்பாக, 3 வழக்குகள் போடப்பட்டு, 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மேற்குவங்கத் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர், டெல்லிக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லாவுக்கு, மேற்குவங்க தலைமைச் செயலாளர் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
ஜே.பி.நட்டாவின் கார் அணிவகுப்பு சென்ற டைமண்ட் துறைமுக சாலையில், 500க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
Comments