தகவல் தொடர்பு செயற்கை கோளை வருகிற 17-ஆம் தேதி விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ
தகவல் தொடர்பு செயற்கை கோளை வருகிற 17ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 17 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி.- சி.50 ராக்கெட் மூலம் செயற்கை கோள் ஏவப்படுமென கூறப்பட்டுள்ளது.
சி.எம்.எஸ்.-01 என்ற அந்த செயற்கைகோள் 17 ஆம் தேதி மதியம் 3.41 மணிக்கு ஏவப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தமான் தீவு முதல் லட்சத்தீவுகள் வரையிலான நாட்டின் மொத்த நிலப்பரப்பிலும் தகவல் தொடர்புக்கு புதிய செயற்கை கோள் உதவும் என்றும், சி.எம்.எஸ்.-01 விண்ணில் ஏவப்படும் 42 வது தகவல் தொடர்பு செயற்கை கோள் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Comments