எல்லை பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க சீனா உறுதி பூண்டுள்ளது - சீன வெளியுறவு அமைச்சகம்
எல்லை பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு உறுதிபூண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
இது குறித்து பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹுவா சுனியிங், நல் உறவுகளை பேணுவது இருநாடுகளின் அடிப்படை நலன்களுக்கும், அதன் மக்களுக்கும் நல்லது என்றார். ஆனால் இந்த உறவுகளுக்கு இரு தரப்பிலிருந்தும் பொதுவான முயற்சிகள் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கு இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை சீனா கடுமையாக பின்பற்றுகிறது என்றும், எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பேணவும், பிராந்தியத்தில் அமைதியை கட்டமைக்கவும் சீனா கடமைப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். அதேநேரம் பிராந்திய இறையாண்மையை பாதுகாக்கவும் சீனா உறுதிபூண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
Comments