மாமல்லபுரம் கடல் அகழாய்வு முடிவு குறித்து மத்திய அரசிடம் கேட்டுத் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தல்
மாமல்லபுரம் கடல் அகழாய்வு முடிவு குறித்து மத்திய அரசிடம் கேட்டுத் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மரபுச் சின்னங்களைக் காக்கக் கூடுதல் நிதி ஒதுக்கவும்,கோரிப் புஷ்பவனம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, மாமல்லபுரத்தில் 2003 முதல் 2004 வரை அலோக் திரிபாதியால் மேற்கொள்ளப்பட்ட கடலடி அகழாய்வின் முடிவுகள் 16 ஆண்டுகளாகியும் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை என்றனர்.
அகழாய்வு முடிவு வெளியிடப்பட்டதா இல்லையா என்றும், இல்லை என்றால் எப்போது வெளியிடப்படும் என்றும் மத்திய அரசிடம் கேட்டுத் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினர்.
Comments