போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன்

0 1900
போதைப்பொருள் வழக்கில் கன்னட நடிகை சஞ்சனா கல்ராணிக்கு பெங்களூரு உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உள்ளது.

போதைப்பொருள் வழக்கில் கன்னட நடிகை சஞ்சனா கல்ராணிக்கு பெங்களூரு உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உள்ளது.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாக கூறி நடிகை சஞ்சனா ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, சஞ்சனாவின் உடல்நிலை குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, நடிகை சஞ்சனா கல்ராணிக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி பெங்களூரு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்தியகுற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைக்கும் போதெல்லாம் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments