150 கி.மீ. நீளம் கொண்ட மிகப்பெரிய பனிப்பாறை தீவு ஒன்றின் மீது மோதும் அபாயம்
150 கிலோ மீட்டர் நீளம் கொண்ட உலகின் மிகப்பெரிய பனிப்பாறை, அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவு ஒன்றின் மீது மோதும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2017ல் அண்டார்டிகா கண்டத்தில் இருந்து பிளவுபட்ட இந்த பிரமாண்ட பனிப்பாறை, கடல் நீரோட்டத்தின் காரணமாக தெற்கு ஜார்ஜியா தீவை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது.
தற்போது தீவிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இது, தீவின்மீது மோதும் பட்சத்தில் அங்கு வாழும் பென்குயின்கள், கடல் நாய்கள் உள்ளிட்ட அரிய உயிரினங்கள் அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Comments