சித்ரா தற்கொலை வழக்கில் உண்மை வெளிவரும்-அமைச்சர் ஜெயக்குமார்

0 10008
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் உண்மை வெளிவரும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் உண்மை வெளிவரும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சித்ரா தங்கியிருந்த விடுதிக்கு அமைச்சர் ஒருவரின் கார் சென்று வந்ததாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வியெழுப்பினர்.

அதற்கு அவர்,  ஹேஷ்யமான கேள்விக்கு தன்னால் பதிலளிக்க முடியாது என்றும், போலீசார் விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறினார்.

தவறு யார் செய்திருந்தாலும், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்தான் என்று கூறிய ஜெயக்குமார்,  கார்  செய்தியை வைத்து அமைச்சர் ஒருவரை டேமேஜ் செய்வது சரியில்லை என்றும், ஆதலால் அந்த கேள்வியை நிராகரிப்பதாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments