எல்லையில் சீனாவும், பாகிஸ்தானும், வாலாட்டினால்.. ஒரே நேரத்தில் அட்டாக்..! தயாராகும் நமது ராணுவம்
எல்லையில், சீனாவும், பாகிஸ்தானும், ஒரே சமயத்தில் அத்துமீறினால், இரண்டு நாடுகளையும், சமாளித்து கடுமையான பதிலடி கொடுக்கும் வகையில், இரட்டை படையணி அமைப்பை ஏற்படுத்துவதில், இந்திய ராணுவம் தீவிரம் காட்டுவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில், கடந்த மார்ச் மாதம் முதல், சீனா அத்துமீறுவதால், பதற்றம் ஏற்பட்டிருப்பதோடு, இந்திய ராணுவமும், நவீன ஆயுதங்களோடு, தனது துருப்புகளை குவித்துள்ளது.
இதேபோன்று, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், பல்வேறு வகைகளில் அத்துமீறுவதும், தனது மண்ணில் இருந்து பயங்கரவாதிகளை ஏவி விடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
சீனா ஒருபுறம், பாகிஸ்தான் மறுபுறமும், எல்லைகளில் அத்துமீறுவதோடு, நாட்டில் ஸ்திரத்தன்மையற்ற சூழலை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து, தோற்று வருகின்றன.
எனவே, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட, இந்திய ராணுவம் திடமாக முடிவெடுத்திருக்கிறது.
சீனா அத்துமீறும்போதும், அங்கு முழு கவனத்தை திருப்புவதோடு, ஏராளமான படையணிகளை லடாக் எல்லையை ஒட்டிய பகுதிகளில் நகர்த்த வேண்டிய பொறுப்பு ஏற்படுகிறது. அந்த சமயத்தில் பாகிஸ்தான் அத்துமீறினால், அதை சமாளித்து முறியடிக்கும் வல்லமை இந்தியாவுக்கு இருந்தாலும், படையணிகளை நகர்த்துவதற்கு, சற்று தாமதமாக நேரிடும் வாய்ப்பும் உண்டு....
ஒரே நேரத்தில், சீனா மற்றும் பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டும் வகையிலும், இரட்டை போர் யுத்த படையணி அமைப்பை உருவாக்குவது குறித்து, இந்திய ராணுவம் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு இரட்டை படையணி அமைப்பை உருவாக்கும் போது, இருவேறு நாடுகளுடனான எல்லைப் பகுதி பாதுகாப்பிற்கும், இருவேறு போர் தளபதிகள் நியமனம் செய்யக்கூடும். இதன்மூலம், சீனா அத்துமீறும்போதும், அதற்கான இந்திய ராணுவ போர் தளபதியும், பாகிஸ்தான் ராணுவம் அல்லது பாகிஸ்தான் தீவிரவாதிகள் அத்துமீறும்போது, அதற்கான இந்திய ராணுவப் போர் தளபதியும், உடனடியாக, அவரவர் துருப்புகள், இராணுவ அதிகாரிகளோடு, கலந்தாலோசித்து, பதில் தாக்குதலை, விரைவாக தொடுக்க வாய்ப்பு ஏற்படும்.
எனவே, இரட்டை யுத்த படையணி அமைப்பே, சரியான செயல்பாடாக அமையும் என, இந்திய இராணுவம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
Comments