ரஜினி கட்சி தொடங்கினால் திமுகவுக்குத்தான் மிகப்பெரிய பாதிப்பு - அமைச்சர் செல்லூர் ராஜு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு என்பது 66 கோடி ரூபாய்தான் என்றும் ஆனால் ஆ.ராசா மீது ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டு என்றும் அமைச்சர் செல்லூர் கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற 2011 சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ரஜினிகாந்த், கமலஹாசன் என எந்த ஒரு நடிகர் வந்தாலும் அதிமுகவிற்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது என்றும் ரஜினி கட்சி தொடங்கினால் திமுகவுக்குத்தான் மிகப்பெரிய பாதிப்பு என்றும் கூறினார்.
Comments