பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை கொலை செய்த பேரன்! - குடியாத்தத்தில் அதிர்ச்சி சம்பவம்

0 12060
பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை பேரன் கொலை செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை பேரன் கொலை செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள மோடிகுப்பம் பகுதியை சேர்ந்த கண்ணன்- ராஜேஸ்வரி தம்பதி . கூலித் தொழிலாளர்களான இந்த தம்பதிக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அதோடு, மகன், மகள் வழியில் பேரன்கள் உள்ளனர். மூத்த மகன் பாபுவுக்கு ராகேஷ் என்ற மகன் இருக்கிறார். ராஜேஷ்வரி நேற்று தன் வீட்டில் பிரியாணி சமைத்துள்ளார். பிறகு, தன் பேரன், பேத்திகளுக்கு பிரியாணியை சாப்பிட வழங்கியிருக்கிறார். ஏனோ... ராகேஷை மட்டும் கூப்பிடவில்லை என்று சொல்லப்படுகிறது. கண்ணன், ராஜேஷ்வரி தம்பதியின் பேரன் பேத்திகள் அனைவரும் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, தாத்தா வீட்டுக்கு வந்த ராகேஷ் , 'தன்னை ஏன் பிரியாணி சாப்பிட அழைக்கவில்லை' என்று கேட்டு கண்ணனிடத்தில் தகராறு செய்துள்ளார். ராகேஷ் குடிபோதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. தாத்தாவுக்கும் பேரனுக்கு ஏற்பட்ட தகராறை விலக்க பாட்டி ராஜேஷ்வரி முயன்றுள்ளார். இதனால், ராகேஷின் கோபம் ராஜேஷ்வரி மீது திரும்பியுள்ளது. பாட்டி என்றும் பாராமல் ராஜேஷ்வரியை தாக்கி அருகிலிருந்த தார் சாலையில் தள்ளியுள்ளார். இதில், தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ராஜேஷ்வரி இறந்து போனார்.

தகவல் அறிந்த குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஷ்வரி சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாட்டியை கொலை செய்த பேரன் ராகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments