சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி திமுக சார்பில் ஆர்பாட்டம்..!
மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுங்க சாவடிகளை அகற்றக் கோரி சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் திமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்குடி, சோழிங்கநல்லூர், நாவலூர் உள்பட 6 இடங்களில் தமிழக அரசின் கீழ் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. மாநகராட்சி சட்ட விதிகளை மீறி செயல்பட்டு வருவதாகக் கூறி அவற்றை அகற்ற வலியுறுத்தி சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
சாதாரண பொதுமக்கள், வணிகர்களை இந்தச் சுங்கச்சாவடிகள் பாதிப்பதாகவும் எனவே அவற்றை அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
Comments