காஞ்சிபுரம் : சந்தேகத்துக்கு பலியான கணவன் - மனைவி!- இரு குழந்தைகள் நிர்கதியான பரிதாபம் !

0 9526

கணவர் மீது சந்தேகத்தால் மனைவி தற்கொலை செய்து கொள்ள, இதனால், கணவரும் தன் உயிரை மாய்த்துக் கொள்ள இரண்டு பெண் குழந்தைகள் அனாதரவான சம்பவம் காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்துள்ளது.

காஞ்சிபுரம் அருகேயுள்ள விநாயகபுரம் குப்பம்மாள் நகரில் கதிர்வேல் - மணிமேகலை தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு முத்து அட்சயா(8) நிவாசினி(4) என்று இரு மகள்களும் உண்டு. கதிர்வேல் அதே பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார் . கணவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்து மணிமேகலை அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.நேற்றிரவு கணவன்- மனைவிக்கிடையே தகராறு நடந்துள்ளது. இதனால், மனமுடைந்த மணிமேகலை கணவர் , மகள்கள் உறங்கிய பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உறங்கிக் கொண்டிருந்த கதிர்வேல் இரவில் விழித்து பார்த்த போது, மணி மேகலை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால், மனமுடைந்து போன கதிர்வேலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் மகள்கள் எழுந்து பார்த்தபோது தாய் - தந்தை இறந்தது கிடப்பதை கண்டு அலறி துடித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து கணவன் மனைவி இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள குழந்தைகள் அனாதரவாக நிற்பது கண்டு உறவினர்கள் மனம் கலங்கி நிற்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments