கோவையில் ரூ.114.16 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடம்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

0 3198
கோவையில் ரூ.114.16 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடம்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 114 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் அக்கட்டிடத்துக்கும், திருச்சி மாவட்டம் நாவல்பட்டு சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 48 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்திற்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இதேபோல் தென்காசி மாவட்டம், தென்காசி நகரில் 119 கோடி ரூபாய் மதிப்பில் தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்படவுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments