பெய்ஜிங்கில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார்கள் சாலைகளில் இயக்கப்பட்டு சோதனை
சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார்கள், சாலைகளில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன.
முதற்கட்டமாக 5 கார்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு கார்களை இயக்கி பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப தானாகவே வேகத்தை மாற்றி அமைத்துக்கொள்ளும் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்களில், சாலை விதிகளை பின்பற்றும் வகையில் சென்சார்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Comments