"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை- அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதா, ஒத்திவைப்பதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் காணொலியில் உரையாடிய அவரிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்தபின் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
ஐஐடி-ஜேஇஇ மெயின் தேர்வை 2021ம் ஆண்டில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதம் என 4 தடவையாக நடத்துவது குறித்த திட்டம் முன் வைக்கப்பட்டிருப்பதாகவும், அதனை அரசு பரிசீலித்து வருவதாகவும் பொக்ரியால் கூறினார்.
நீட் தேர்வுக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், வரும் நாள்களில் அது வெளியிடப்படும் என்றும் பொக்ரியால் தெரிவித்தார்.
Comments