அரியலூர்: ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை தாக்கி அழிக்கும் இலைச்சுருட்டுப் புழுக்களால் விவசாயிகள் வேதனை
அரியலூர் மாவட்டத்தில ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை தாக்கி வரும் இலைசுருட்டுப் புழுக்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கங்கைகொண்ட சோழபுரம் அடுத்த உட்கோட்டை சுற்றுவட்டாரத்தில் இந்த பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. குளிர்ச்சியான சீதோஷணத்தில் இனப்பெருக்கம் செய்யும் என்று கூறப்படும் இந்தப் புழுக்கள், நெற்கதிர்களின் இலையை சுருட்டி அதனுள்ளே குடியிருந்து மெல்ல மெல்ல அதன் அடிப்பகுதி வரை செல்லும் என்றும் அதனால் நெற்கதிர்கள் சாம்பல் நிறத்துக்கு மாறி விடும் என்றும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்த வேளாண் துறை அதிகாரிகள், ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 400 மில்லி போனோபாஸ் என்ற மருந்தையும் அதனுடன் திரவ ஓட்டு மருந்தையும் கலந்து தெளிக்க வேண்டும் என்று அறிவுரை கூறிச் சென்றனர்.
Comments